உண்மை பலியை உணர்ந்து தருகின்றோம் ***

உண்மை பலியை உணர்ந்து தருகின்றோம்
உலகம் வாழ எம்மைத் தருகின்றோம்

1. குடிசையில் எரியும் விளக்கினை அணைத்து - உன்
கோபுர தீபம் ஏற்றி வைத்தோம்
ஏழையின் பசியினை மறந்து உனக்கு
காய்களும் கனிகளும் படைத்து நின்றோம்
ஸா தஸ நீ நீ பநி தா கப தா பத பா தநி தா
ஸா ஸா நிதப நீ நீ தபக பநிதா
மனநிலை மாறி புதுப்பலி தந்தோம்
மனிதனுக்காக எம்மையே தந்தோம்
மனிதன் வாழ எம்மைத் தந்தோம் ஏற்பாயே

2. பாலுக்கும் கூழுக்கும் பஞ்சமென்றாலும் - உன்
பல்லாக்கு தூக்க ஓடி வந்தோம்
பாமரன் கண்ணீர் துடைக்க மறந்து
உனக்கு ஆறுதல் சொல்ல வந்தோம் ஸா
மனிதனின் கவலை தீர்த்திட வந்தோம்
மனிதனுக்காக எம்மையே தந்தோம்
மனிதன் வாழ எம்மைத் தந்தோம் ஏற்பாயே