இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரைப் புகழ்வது நல்லது ***

ஆண்டவரைப் புகழ்வது நல்லது
அவர் பெயரைப் பாடுவது நல்லது நல்லது
ஆண்டவரைப் புகழ்வது நல்லது

1. ஆண்டவரைப் புகழ்வது நல்லது
உன்னதமானவரே உம் திருப்பெயருக்குப்
புகழ்பாடுவது நல்லது
காலையில் உம் இரக்கத்தையும்
இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும்
எடுத்துரைப்பது நல்லது

2. பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும்
யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது
ஏனெனில் ஆண்டவரே உம் செயல்களால்
எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர்
உம் திருக்கரப் படைப்புக்களைக்
குறித்து நான் அக்களிக்கிறேன்