அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள் ***

அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில்
மகிழுங்கள் இறையரசின்

1. இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்
அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும்
பாவம் போக்கிட வேண்டும்
கோபம் போக்கிட வேண்டும் - என்றும்
அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும்

2. ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்
அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும்
மனிதம் மலர்ந்திட வேண்டும்
புனிதம் அடைந்திட வேண்டும் - அதனால்
இடைவிடாது நாம் ஜெபிக்க வேண்டும்