இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே ***

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே

1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம்
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்

2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும்
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்

3. மலர்ந்திடும் போது மனம் தரும் பூப்போல்
புலர்ந்திடும் வாழ்வு பணிவிடை செய்தால்
நலம்பெறக் காக்கும் கடவுளைப் போற்றி
நிலந்தனில் இணைந்த குடும்பமாய் வாழ்வோம்