அலைகடலாய் எழுந்து வருகிறோம் தெய்வமே ***

அலைகடலாய் எழுந்து வருகிறோம் தெய்வமே
உம் சந்நிதியில் கூடி வருகிறோம்
ஆனந்தமாய் இணைந்து வருகிறோம் இயேசுவே
உம் அருள் மழையில் நனைந்து மகிழவே
எழுகிறோம் வருகிறோம் உம் பாதம் சரணாகிறோம்

1. உண்மைக்காவும் உயர் நீதிக்காகவும்
குரல் கொடுக்கும் குழுமமாகவே
தலைவன் இயேசுவின் இலட்சியக் கனவை
செயல்படுத்தும் சீடராகவே
உழைப்பவரின் வியர்வைத் துளி
உழுபவரின் கண்ணீர்த் துளி
மனிதம் தேடும் விடியலாகட்டும்
மனிதத்திலே இதயம் மலரட்டும்

2. ஏழை எளியர்க்கு செய்த போதெல்லாம்
எனக்கு செய்தீர் என்று சொன்னீரே
தன்னலம் மறந்து தடைகளைக் கடந்து
இணைய வேண்டும் இயக்கமாகவே
துணிந்து நின்று குரல் கொடுப்போம்
தோழமையில் தோள் கொடுப்போம்
இறையாட்சி மண்ணில் மலரவே
இறை விருப்பம் நிறைவேறவே