காணிக்கையாக நான் வந்தேன் ***

காணிக்கையாக நான் வந்தேன்
உந்தன் கமலபாதம் சரணடைந்தேன்
ஏற்றருள்வீர் என்னை ஆண்டவரே

1. வானும் மண்ணும் உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
வாழ்வும் வழியும் உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
உம் அன்பெனக்கென்றுமே இனிமையானது
உம் அருளெனக்கென்றுமே போதுமானது
சரணம் இயேசுவே - சொந்தம் ஆனேன்

2. உடல் பொருள் ஆவி உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
உழைப்பின் பயனும் உம் சொந்தமாமே
உம் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
உம் வாக்கெனக்கென்றுமே நிலைவாழ்வு தருவது
உம் இரக்கம் எனக்கென்றுமே தேவையானது