உமது அருளையும் நீதியையும் ***

உமது அருளையும் நீதியையும்
புகழ்ந்து பாடுவேன் ஆண்டவரே
உமக்கு கீதம் இசைத்திடுவேன்

1. மாசற்ற வழியினிலே கருத்தாய் நடந்திடுவேன்
தூய இதயத்துடன் உம் இல்லத்தில் வாழ்ந்திடுவேன்
என்றும் நன்றி இதய நன்றி
எங்கள் இறைவா உமக்கு நன்றி

2. நம்பிக்கைக்குரியவரை என்னோடு வாழச் செய்வேன்
நேரிய மனத்தோர்க்குப் பணிவிடை புரிந்திடுவேன்