இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார் ***

இறைவா உம் இல்லத்திலே தங்கி வாழ்வோர் யார்
இறைவா உம் திருமலையில் குடியிருப்போர் யார்

1. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன்
நீதி நியாயத்தில் நிலை நிற்பவன்
இதயத்தில் நேரியவை தியானிப்பவன்

2. நாவால் எப்பழிச் சொல்லும் கூறாதவன்
அயலானுக்குத் தீமை செய்யாதவன்
பிறரைப் பழித்து உரைக்காதவன்

3. தீயோரை இழிவாகக் கருதுபவன்
ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்
தனக்குத் துன்பம் வந்தாலும்
தந்த வாக்குறுதியை மீறாதவன்