இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நன்மைகள் செய்த இறைவனுக்கு ***

நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரீர்
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

1. உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது பெரும்பலியாம்
கொடைகள் பெறுவது தகும் வழியாம்
குறையினைப் போக்கும் கோவழியாம்

2. வானத்தை நோக்கும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம்
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம்
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்