அம்மா உந்தன் அன்பினிலே அருள்வாய் எமக்கு அடைக்கலமே ***

அம்மா உந்தன் அன்பினிலே
அருள்வாய் எமக்கு அடைக்கலமே

1. இறைவன் படைத்த எழிலே எழிலே
இயேசுவைத் தந்த முகிலே முகிலே
தூய்மை பொழியும் நிலவே நிலவே
துணையே வாழ்வில் நீயே

2. புவியோர் எங்கள் புகழே புகழே
புனிதம் பொங்கும் அழகே அழகே
உம் மகன் புதிய உறவில் உறவில்
எம்மையும் வதியச் செய்வாய்