இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்பைக் கொண்டாடுவோம் இறைஅன்பில் ஒன்றாகுவோம் ***

அன்பைக் கொண்டாடுவோம் இறைஅன்பில் ஒன்றாகுவோம்
இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம்

1. பகைமை உணர்வுகளை நாம் களைந்து
பாசத்தைப் பொழிந்தே வாழுவோம்
வேற்றுமை நிலைகளை மதித்திங்கு லாலலா
ஒற்றுமையுடனே பழகுவோம் லாலலா
அன்பிற்கு இலக்கணமாகிடவே
அன்றாடம் உறவுகள் வளர்த்திடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்

2. பாகுபாடுகளை நாம் வெறுத்து
பகிர்விலே சமத்துவம் காணுவோம்
பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு லாலலா
பிறரையும் நேசிக்கத் தொடங்குவோம் லாலலா
உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே