இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட ***

மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
உறவினராய் வருவோம்
மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட
அன்பினில் வாழ்ந்திடுவோம் - இறை

1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்
பூமியில் ஒன்றுமில்லை
இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்
பகைமையின் தொல்லையில்லை
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்

2. மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்
இறைவனின் குடும்பமில்லை
எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்
இறைவனும் உயிர்ப்பதில்லை
அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்