உறவில் மலரும் அன்பின் முரசு முழங்குது ***

உறவில் மலரும் அன்பின் முரசு முழங்குது
உரிமை பெறவும் புதுமை பெறவும் அழைக்குது
பகிர்ந்து தரவும் பலனைப் பெறவும் அழைக்குது
பலரும் வாழ உறவின் விருந்து மணக்குது

1. வேற்றுமைகள் மறந்து நிற்கும் புதிய உலகிலே
வேண்டியவர் யாவருமே பொதுவெனக் கொள்வோம்
சாதி வெறிகள் கடந்து நின்று அன்பு செய்குவோம்
சமத்துவமே உயிர்மூச்சு என்று சொல்லுவோம்
அனைவருமே இயேசுவுடன் ஒன்று கூடுவோம்
அவருடனே வாழ்ந்து தினம் சாட்சி சொல்லுவோம்

2. உண்மைக்காக சாட்சி சொல்லும் இனிய உலகிலே
நீதி நேர்மை நிலைக்க நம்மை தினம் இழந்திடுவோம்
சுயநலங்கள் மறந்து நின்று உயர்வு காணுவோம்
இறைபணியே உயிர்வாழ்வு என்று கொள்ளுவோம்