ஒளியில் நடந்து வா சகோதரா ஒளியில் நடந்துவா சகோதரி ***

ஒளியில் நடந்து வா சகோதரா ஒளியில் நடந்துவா சகோதரி
ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா
வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா இயேசு நம் ஒளி

1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை
அவரில் வாழ்ந்தால் பாவமில்லை
மீட்கும் தேவன் அவரன்றோ
இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ

2. அவரில் வாழ்ந்தால் நோயில்லை
அவரில் வாழ்ந்தால் சுமையில்லை
குணமாக்கும் தேவன் அவரன்றோ
இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ

3. அவரில் வாழ்ந்தால் வறுமையில்லை
அவரில் வாழ்ந்தால் துன்பமில்லை
நிரப்பும் தேவன் அவரன்றோ
இன்பத்தின் இறைவன் அவரன்றோ