தந்தேன் இறைவா உன் தாளினைப் பணிந்து தந்தேன் ***

ந்தேன் இறைவா உன் தாளினைப் பணிந்து தந்தேன்
என் வாழ்வை முழுவதும் உன்னிடம் தந்தேன்
ஏற்றருள்வாய் என் இறைவா ஏற்றருள்வாய்

1. உலகினை எனக்களித்தாய் அதில்
உயர்வாம் பொருளையும் சேர்த்தளித்தாய்
மனதினை உனக்களித்தேன் - என்
மண்ணிலே மகிழ்ந்திட்ட மனமளித்தேன்
புனிதமாக்கும் என் மனதை புனிதமாக்கும்

2. வலிமையை எனக்களித்தாய் - உடன்
வளம் சேர் அறிவையும் சேர்த்தளித்தாய்
வலிமையை பயன்படுத்தி - நான்
நலனோடு நலிவும் அனுபவித்தேன்
புனிதமாக்கும் என் உழைப்பை புனிதமாக்கும்