அலைகடலெனத் திரண்டு வாரீர் இறைமக்களே ***

அலைகடலெனத் திரண்டு வாரீர் இறைமக்களே
அருள்மழையினைப் பொழிய தேவன் காத்திருக்கின்றார்
ஒரு கொடி கிளை நாமென இனி வாழும் நாளிலே
புது உறவும் புது யுகமும் ஆகும் வாழ்விலே

1. வேதம் வாழ வேண்டும் மனிதம் மலர வேண்டும்
நாடு செழிக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும்
இயேசுவாக வேண்டும் வரங்கள் சேர வேண்டும்
வாழ்வினில் புது வசந்தங்கள் வர நீதிதேவன் ஆட்சி மலர
உண்மை அன்பு நீதியே மண்ணில் வாழ்வுப் பாதைகள்
உலகம் தேடும் அமைதியை உணர்ந்து உயர்ந்து வெல்க

2. பொய்மை நீங்க வேண்டும் வாய்மை வளர வேண்டும்
தீமை ஒழிய வேண்டும் தர்மம் ஓங்க வேண்டும்
வாழ்வில் தூய்மை வேண்டும் நெஞ்சில் நேர்மை வேண்டும்
வாழ்வினில் புது அர்த்தங்கள் பிறக்க பாசதீபம் எங்கும் ஒளிர