இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம் ***

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம்
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம்
ஆலயம் ஆலயம் ஆலயம் ஆலயம்

1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் ஆலயம்
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய் தனைத் தரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம்

2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் ஆலயம்
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் ஆலயம்
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம்