இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறையாட்சி மலர வேண்டும் புதுவாழ்வு புலர வேண்டும் ***

இறையாட்சி மலர வேண்டும் புதுவாழ்வு புலர வேண்டும்
வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும்
நிலைமாறுமா கரம் சேருமா மனுவாகுமா துயர் மாறுமா
நிலை மாறுமே கரம் சேருமே மனுவாகுமே துயர் மாறுமே
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்

1. பாலும் தேனும் பொழிந்திடுமே கானான் கனவு பலித்திடுமே
பாறை தண்ணீர் சுரந்திடுமே மன்னா நமது கரை தருமே
பாறை நிலங்கள் யாவும் இங்கு பசுமை நிலங்கள் ஆகும்

2. சிங்கமும் கன்றும் தோழமையில் சிறுவர் நட்பு பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில் துணுக்குகள் எல்லாம் நும்பொழிவில்
வாழும் மனங்கள் யாவும் இனி பாசம் நிறைந்ததாகும்