என் ஆயன் என் நேச ஆண்டவர் ***

என் ஆயன் என் நேச ஆண்டவர்
எனக்கெந்த குறையுமில்லை
மனம் களைத்திடும் போதவர் அருகிருந்து
என்னுள் புதுஉயிர் ஊட்டுகின்றார்

1. அன்புள்ள அவரின் இல்லத்திலே
ஆயுள் முழுதும் வாழ்ந்திருப்பேன்

2. தீமைகள் எதற்கும் அச்சம் இல்லை
ஆண்டவர் என்னோ டிருப்பதனால்

3. நேரிய வழியில் என்னை நடத்தி - தம்
திருப்பெயரை மகிமை செய்தார்

4. அருளும் கருணையும் என்னைத் தொடரும்
ஆறுதலாய் அவர் துணை இருக்கும்