இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் ***

அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே

1. கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும்
மடல்விரி தாழையும் மணமது வீசும்
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்

2. பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய்
பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய்
உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம்
உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய்

3. உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தைத் தந்தோம்
கண்ணென எம்மைக் காத்தருள்வாயே
கர்த்தரின் தாயே துணை என்றும் நீயே