எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே ***

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே 
தொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவே

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் ,
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்

2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் ,
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்

3. கவலையில் ஆறுதலும் , கங்குலிலென் ஜோதியும் ,
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ,
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும்

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் - சம்பாத்யமும் ,
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ,
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்