அன்னையே உந்தன் ஆதார விந்தம் என் சொந்தம் ***

அன்னையே உந்தன் ஆதார விந்தம் என் சொந்ம் - இனி
என்றும் உந்தன் தஞ்சம் - அருள்
பொங்கும் அன்பு சிந்தும்

1. தத்தம் சம்பூரண ராணியே
நித்தம் அருள் ஊறும் கேணியே
சித்தம் பணிந்த நல்மாமரியே ஆ - தூய
மங்கள வாழ்த்தினைப் பெற்றவள் என்

2. ஏக புவனத்தின் ஜோதியே
எண்ணில்லா அழகு தேவியே
திங்களைத் தேய்த்த பொற்பாதமே ஆ
திவ்ய பனிமய இராக்கினியே