உன் ஆலய சந்நிதி மூலையிலே ***

உன் ஆலய சந்நிதி மூலையிலே
தேவா எனக்கோர் இடம் வேண்டும்
இயேசு உந்தன் திருமுக அழகினை
பாடித் தொழ வேண்டும் - தேவா

1. மணிமுத்து மாளிகை மாடத்திலே
மன்னராய் வாழ்ந்திடப் பெருமையில்லை
உன் திருக்கோவிலில் காவலனாய் நானிருக்க மேன்மையுண்டு

2. தட்டினால் திறக்கும் உன் மனக்கதவு
தேடிட நாளெல்லாம் திடம் அருள்வாய்
சிறு பொழுதேனும் உனைப் புகழ உனதருளை எனக்கருளும்