குருவாய் மலர்ந்த கிறிஸ்தவ உலகே ***

குருவாய் மலர்ந்த கிறிஸ்தவ உலகே
குருவுடன் பலியில் இணைந்திட வருக

1. எல்லையில் மகிமை இறைவனுக்களிக்க
தொல்லைகள் விலக்கி இன்பத்தில் நிலைக்க
இதயத்தில் பெருகும் நன்றியைத் தெளிக்க
இறைவனுக்குகந்த பலி செய்ய எழுக

2. இறைவனின் உரையில் இனிமையின் பொலிவும்
இறைதரும் கனவில் இறப்பில்லா வாழ்வும்
நமைப் பலிப்பொருளாய் தருவதில் நிறைவும்
நாளுமே சுவைக்க பலிசெய்ய எழுக