இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை ***

இதோ உமது அடிமை இறைவா ஏற்பாய் என்னை

1. எரியா விளக்கு எனை நான் உனக்குத்
தந்தேன் ஏற்றிடுவாய்
உன்னொளி துலங்க தன்னையே வழங்கும்
சுடராய் மாற்றிடுவாய்

2. மலராக் கொத்து வாழ்வினைக் கொடுத்து
என்னை இழந்திருப்பேன்
உன்னை அடைந்து உயிரில் கலந்து
உறவாய் நிலைத்திருப்பேன்

3. உலகை மறந்து உனை நான் நினைத்து
நெஞ்சம் நிறைந்திருப்பேன்
காலடி அமர்ந்து கண்ணீர் உலர்ந்து
கவலை மறந்திருப்பேன்