இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அடைக்கலப் பாறையான இயேசுவே ***

அடைக்கலப் பாறையான இயேசுவே
அரணும் கோட்டையும் ஆன இயேசுவே
நீரே எனது வலிமை நீரே எனது பெருமை
நீரே எனது வாழ்வு இயேசய்யா

1. தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு
நீயல்லோ ஆண்டவரே
பிறப்பிலும் வாழ்விலும் நீயே எனக்கு
ஆதாரம் நீயல்லவோ - எந்தன்

2. போகும் வழியை விசாலமாக்கி
என் எல்லையைப் பெரிதாக்கினீh
உயரமான இடத்திலே என்னை நிறுத்தி
மாண்புறச் செய்கின்றீரே - என்னை