இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு ***

காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை

1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு
பெரும்வர கல்வாரி அரும்பலி நினைவாகும்
திருமறைத் தகனப்பலி பீடத்தில் குழுமிவிடு

2. வருங் குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து
சிரமே தாள் பணிந்து சிந்தையை இறைக்களித்து
பரமுதல் தருகின்ற அருட்பலி பங்கேற்பாய்