இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரே நீரே என் புகலிடம் ***

ஆண்டவரே நீரே என் புகலிடம்
நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன்
உன்னதரின் அடைக்கலத்தில்
மன்னவர் நிழலில் வாழ்பவர் நீர்
நீயே சொல் நீயே சொல் நீயே சொல்வாய்

1. வேடன் கண்ணியிலிருந்தும் கொடிய நோயிலிருந்தும்
அவரே உன்னை விடுவிப்பார்
தம் சிறகுகளால் உன்னைக் காப்பார்
அவரின் இறக்கைக்குள் அடைக்கலம் புகுவாய்
தவறா அவரின் வார்த்தைகள் கேடயம் கவசமாகும்

2. என்னைச் சார்ந்தவரை விடுவிப்பேன்
என்னை அறிந்தவரைக் காப்பாற்றுவேன்
தேவைக்கு கூப்பிடும் குரல் கேட்பேன்
துன்பவேளையில் அவனோடிருப்பேன்
விரைந்து மீட்பு தருவேன்
அவரை எந்நாளும் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்