இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இணையில்லா இறைவனின் சொந்தங்கள் ***

இணையில்லா இறைவனின் சொந்தங்கள் - நாம்
இறைவனின் சாயல்களாம்
உறவினில் நனைந்திடும் நெஞ்சங்கள் - புது
உலகத்தின் விடியல்களாம்
தன்னை பலியாய் தந்த பரமன் இயேசு
பலியினில் இணைந்திடுவோம்
கண்ணைக் காக்கும் இமைபோல்
காக்கும் தேவன் திருவடி சரணடைவோம்

1. உதவிடும் கரம் இணைந்தால்
இந்த உலகினில் வறுமையில்லை
உறவுகள் பகிர்ந்துவிட்டால் எந்த
மனதிலும் சோர்வுமில்லை
ஒன்று கூடுவோம் நன்மை நாடுவோம்
அன்பு இறைவனின் சாயலை நாம் மதிப்போம்

2. அன்றும் இன்றும் என்றென்றும்
ஆண்டவர் அருள்மழை பொழிகின்றார்
ஒன்றாய் வந்தால் தடையில்லை
அன்பிற்கு சாட்சிகள் ஆகிடுவோம்
உள்ளங்கள் கடவுளின் இல்லங்கள்
அதை உவந்தே அர்ப்பணிப்போம்