இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி ***

புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி
புனித தேவனின் ஆலயம் புதுவாழ்வின் அழைப்பாகவே
அப்பா அன்பான தெய்வமே
உம்மை ஆராதித்தோம் துதித்தோம்

1. கனவாய் நின்ற காட்சிகள் இங்கு
நனவாய் மாறியதே
கனலாய் தேவ ஆவியின் அருள்
ப்ரசன்னம் பரவிடுதே
புனலாய் ஆலய வலப்புறம் இருந்து
புதுவாழ்வு பொங்குதே - அதன்
கரையில் வாழ்வோர் காலங்களெல்லாம்
கனி தந்து வாழ்வரே

2. கிழக்கே காணும் வாசலில் நம்
நம்பிக்கை உதிக்கின்றதே
அழைக்கும் தந்தை பாசத்தில் நம்
ஆன்மா தழைக்கின்றதே
இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி
இறையவனின் மாட்சியை நாம்
இசைவோம் அவர்தம் இயக்கத்தின் வழியே
இடர் நீங்கி ஓங்கவே