தந்தேன் தந்தேன் இறைவா ***

தந்தேன் தந்தேன் இறைவா - என்னைத்
தந்தேன் தந்தேன் தலைவா
உள்ளதை எல்லாம் உமக்காக
உயிர் பலியானாய் எமக்காக - அதில்
என்னையும் இணைத்திட வா ஆ

1. இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம் - அங்கு
இருக்கும் வளங்கள் உந்தன் அருள்கோலம்
கண்டேன் கண்டேன் உந்தன் கருணையுள்ளம் - தினம்
வந்தேன் வந்தேன் உந்தன் மலர்ப்பாதம்
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் - உன்
பலியாய் என்னையும் மாற்றிடுவாய்

2. இதழ்கள் விரிக்கும் நல் மலர்க்கூட்டம் - எங்கும்
இறைவன் இருப்பதைப் பறைசாற்றும்
என்றும் என்றும் என் இயேசு தேவா - நீ
தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கைப் பொருளாய் நான் மாறி - உன்
காலடி வந்தே சரணடைந்தேன்