முகம் நோக்கினேன் சிரம் தாழ்த்தினேன் ***

முகம் நோக்கினேன் சிரம் தாழ்த்தினேன்
கரம் நீட்டி காணிக்கை தனை ஏந்தினேன் இறைவா

1. இறைவாக்கு வழிநின்று இனிதாகவே
இறைவா என் வாழ்வெல்லாம் பணியாகவே
அனைத்தும் உன் மகிமைக்கு அணியாகவே
அடைந்தேன் உன் திருப்பாதம் சரணாகவே

2. உமதாசி தினம் வேண்டும் நிறைவாகவே
சமநீதி சமுதாயம் உருவாகவே
வறியோர் தம் வாழ்விங்கு வளமாகவே
விடியட்டும் புதுவாழ்வு விரைவாகவே