ஏற்றிடுவீர் பிதாவே மரு ஏதுமில்லாத அப்பமிதை நீர் ***

ஏற்றிடுவீர் பிதாவே மரு ஏதுமில்லாத அப்பமிதை நீர்
மாற்றிடுவீர் உம் சுதனுடலாக
மாசுகள் நீங்க அருள் நிறைந்தோங்க

1. தகுதியில்லாத அடியோர் சேர்ந்து
திருச்சபை பெயரால் குருவின் கையால்
மிகுந்த அன்போடு உடலுயிர் யாவும்
மனமுவந்தளித்தோம் மிகத் தயைகூர்ந்து

2. புனித நல்வாழ்வில் வளர்ந்தே நாளும்
புகழ்ந்தும்மை போற்றி பணிகள் ஆற்றி
மனிதர் எல்லாரும் முடிவில்லாத
மகிமையின் முடிவை அடைந்திட செய்வீர்

3. நினைவுடன் வார்த்தை செயல்கள் நடுவில்
நிலவிடும் உவகை துயரம் தாழ்வு
அனைத்தும் ஒன்றாக ஜெபத்துடன் சேர்த்தே
அகமகிழ்ந்தெம்மை முழுவதும் தந்தோம்