இறைவா என்னை ஏற்றருளே ***

இறைவா என்னை ஏற்றருளே - இந்த
சிறுபொழுதேனும் ஏற்றருளே

1. உன்னையன்றிக் கடந்துவிட்ட
அனாதையான அந்நாட்கள்
என்றென்றும் எந்நாளிலுமே
மறந்துபட்டே அவை ஒழியட்டும்

2. இந்த சிறிய பொழுதை மட்டும்
உன் ஒளியின் கீழ் நிலைநிறுத்தி
உன் மடிமீது கிடத்தி அன்பாய்
விரித்தருள்வாய் என் ஆண்டவனே