இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறைவனைப் புகழ்வோம் வாருங்களே ***

இறைவனைப் புகழ்வோம் வாருங்களே
இணையில்லா அன்பில் இணைந்திடுவோம்
இந்நாளில் நம்மை அழைக்கின்றார்
எல்லாரும் ஒன்றாய் கூடிடுவோம்

1. இருகரம் நீட்டி அழைக்கின்றார்
இதயத்தைத் திறந்து அழைக்கின்றார்
உதயத்தைத் தேடி அலைவோரின்
உள்ளத்தைத் தேடி அலைகின்றார்
புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்
புனிதன் இயேசு கொடுக்கின்றார்

2. அன்புடன் வாழ அழைக்கின்றார்
அருளினைப் பொழிய அழைக்கின்றார்
இன்னலில் வாடி அழுவோரின்
இதயத்தைத் தேற்ற அழைக்கின்றார்