உன்னிலே என்னைக் கரைத்து ***

உன்னிலே என்னைக் கரைத்து
வாழ்வின் சுவையைத் தரவந்தேன்
வாழ்விக்கும் வல்ல தேவா ஏற்றுக்கொள்ளுமே
என்னிலே உன்னைக் கண்டு உன்னைப் போல வாழ்ந்திட
உன் திருப்பீடம் வந்தேன் ஏற்றுக்கொள்ளுமே

1. இதயத்தில் உந்தன் ஈரம் விழியினில் உந்தன் பாசம்
அவனியில் காட்டிட வந்தேன்
காற்றினில் உந்தன் வேதம் ஆனந்த கானமாக்கி
மாந்தர்க்கு இசைத்திட வந்தேன்
நான் என்றும் வாழத்தானே தன்னையே தந்த தேவா
உன்னையே வாழ வந்தேன் ஏற்றுக்கொள்ளுமே

2. எண்ணத்தில் உன்னைத் தாங்கி உன் பணி கரத்தில்
ஏந்தி வாழ்வெல்லாம் உழைத்திட வந்தேன்
புன்னகை முகத்தில் ஏந்தி பூமொழி உலகில் தூவி
உன் அன்பைப் பொழிந்திட வந்தேன்
என்னையே நினைத்து நாளும் தன்னையே தந்த தேவா
உன்னையே நினைத்து வாழ என்னைத் தருகின்றேன்