இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில் ***

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்
சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும்
இயேசுவின் பலியினிலே
இணைவோம் இயேசுவின் பலியினிலே
கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்
மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

1. மூவொரு கடவுளர் முடிவில்லா ப்ரசன்னம்
குடும்பமாய் இணைக்கின்றது
நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது
பலியினில் கலந்து உறவினில் இணைய
நம்மையே அழைக்கின்றது - இன்று

2. இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது
சோதனை வென்று சாதனை படைக்க
ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது