நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக ***

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக

1. நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக - என்
அகத்துள்ளதெல்லாம் அவரது
திருப்பெயரை வாழ்த்துவதாக
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே

2. அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கின்றார்
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்
உன் உயிரை அழிவினின்று மீட்கின்றார்
அருளையும் இரக்கத்தையும் உனக்கு
முடியாகச் சூட்டுகின்றார்