இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மலைகளை நோக்கியே என் கண்களை உயர்த்தினேன் ***

மலைகளை நோக்கியே என் கண்களை உயர்த்தினேன்
எங்கிருந்து எனக்கு உதவி வரும்
மண்ணையும் விண்ணையும் உண்டாக்கிய
ஆண்டவர் அவரிடமிருந்தே வரும்

1. உன் கால் இடறாமல் அவரே பார்த்துக்கொள்வார்
உன்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார்
இஸ்ராயேலைக் காக்கிறவர்
உறங்குவதில்லை அயர்வதில்லை
ஆண்டவர் உன்னைக் காக்கின்றார்
வலப்புறம் நிற்கின்றார்

2. பகலில் கதிரவனும் உன்னைத் தாக்காது
இரவில் குளிர்நிலவும் உன்னைத் தீண்டாது
தீமையினின்று பாதுகாப்பார்
அவரே உன் உயிரைக் காத்திடுவார்
பயணத்தில் துணையாய் உடன் வருவார்
என்றும் அருகிருப்பார்