இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில் ***

கண்ணின் மணிபோல கடவுள் காக்கையில்
எனக்குக் குறையேது
அரணும் கோட்டையும் ஆனவரே
அன்பின் தேவனாய் இருப்பவரே

1. இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும்
வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும்
எனக்கு கேடயமே
உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே

2. எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது
செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
தூதரை அனுப்பிடுவார்
கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார்.