இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காற்றே கடலே மேகங்களே கடவுளின் புகழ்பாடுங்கள் ***

காற்றே கடலே மேகங்களே கடவுளின் புகழ்பாடுங்கள்
கார்கால மேகம் கருக்கொண்ட மழையே
கடவுளின் புகழ்பாடுங்கள்

1. வெம்மையின் சூரியனே தண்மையின் நிலவே
கடவுளின் புகழ்பாடுங்கள்
வானத்து மேலுள்ள விண்மீனே முகிலே
கடவுளின் புகழ்பாடுங்கள்
நெருப்பே கல்மழையே திகிலூட்டும் புயலே
கடவுளின் புகழ்பாடுங்கள்
பனியே அனலே புகழ்பாடுங்கள்

2. உயர்வான மலையே தாழ்வான குன்றே
இறைவனின் புகழ்பாடுங்கள்
ஓடிவரும் நதியே வளமாக்கும் நிலமே
இறைவனின் புகழ்பாடுங்கள்
வயலோர மரமே வரப்போரச் செடியே
இறைவனின் புகழ்பாடுங்கள்
கடலின் மீனே புகழ்பாடுங்கள்