யாக்கோபின் இறைவனைப் புகழ்ந்திடுங்கள் ***

யாக்கோபின் இறைவனைப் புகழ்ந்திடுங்கள்
நம் மீட்பின் கருவி அவர்
யாழினால் அவரது புகழ் பாடுங்கள் - எங்கும்
அவரின் பெயர் விளங்க

1. நீதியும் நேர்மையும் என்றும் அவரது விருப்பமாமே
வானமும் வையமும் அவர் அருளால் நிறைந்துள்ளது
பூவுலகெல்லாமே குடிமாந்தர்
அனைவருமே இறைவனின் கைவண்ணமே

2. இயேசுவின் திருப்பெயர் என்றும் மகிழ்வு தருகின்றது
இறைவனின் இரக்கம் எங்கும் அரணாய் இருக்கின்றது
அவரில் நம்பிக்கை கொள்வோர்
யாவருமே வெற்றி பெறுகின்றனர்