திருவே திருப்பலி பொருள் தனையே ***

திருவே திருப்பலி பொருள் தனையே - உன்
திருக்கழல் வணங்கித் தருகின்றோம்

1. ஒளிரும் தணலில் உனதெழில் வடிவை
உணர்ந்திட புகுவோம் அன்பாக
புரிந்திடும் வேள்வி விளைந்திடும் ஒளியில்
புனிதனைப் படைத்தோம் பலியாக

2. ஏழையர் வழங்கும் உளமெனும் தீபம்
எரிந்திட உன் அருள் கணல் வேண்டும்
உலகின் இருளே விடுபட என்றும்
உன்னிடம் சரண் பெறவேண்டும்

3. நீதியின் கதிரோன் நீ தரும் ஒளியால்
நிலைபெறும் வாழ்வில் இருளில்லை
ஒளியின் முதல்வன் உனை யாம் அகன்றால்
ஒளியும் வழியும் வேறில்லை