இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வானக அணிகளின் ஆண்டவரே நீர் வாழும் இல்லம் ***

வானக அணிகளின் ஆண்டவரே நீர் வாழும் இல்லம்
எத்துணை மேலானது எத்துணை மேலானது

1. ஆண்டவர் தம் ஆலய முற்றங்களை
என் ஆன்மா விரும்பித் தேடுதே
ஆண்டவரை நினைத்து என் உள்ளமும் உடலும்
இன்று ஆனந்தம் கொண்டாடுதே

2. உம் இல்லம் உறைவோர் பேறுபெற்றோர்
நிதம் உம்மைப் புகழ்ந்து பாடுவார்
உம்மிடம் வர திருப்பயணம் செய்துதவி கொள்ளவே
எந்நாளும் பேறுபெற்றோர்

3. அருளுடனே மாட்சியும் தருபவராம்
நம் ஆண்டவர் அறத்தில் நிலைப்போர்க்கு
நலன்களெல்லாம் வாரியே வழங்கிட மறப்பதில்லை
நம்பிக்கை கொள்வோமே நாம்