ஆண்டவர் தந்த நன்னாளிதே ***

ஆண்டவர் தந்த நன்னாளிதே
ஆர்ப்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
அவர் தரும் மீட்பை நாம் பெறவே
திருப்பலி சேர்ந்திடுவோம்
இது மறக்க முடியாத திருப்பலி
பேரிரக்கம் பொழிகின்ற தியாகபலி

1. இயேசுவின் நாமத்தில் கூடிவந்தோம்
அவர் நம் நடுவில் இதோ இதோ
பாசமுடன் நம் பெயர் சொல்லி
அழைக்கின்றார் நாம் ஆர்த்தெழுவோம்
அவர் வழியாய் நம் வானகத்தின் தந்தையை நாமறிந்தோம்
அனைத்தையும் படைத்து நமக்களித்த கடவுள் அவர்தாமே
அவர் பேரன்பு கனிந்த திருப்பலியில் அவரை ஆராதிப்போம்

2. திருப்பலி கண்டிடும் நாளெல்லாம்
திருநாள் ஆகும் வாழ்வினிலே
அருள்பொழிகின்ற பலியிதிலே
அழைக்கப் பெற்றோம் நாம் பேறுபெற்றோம்
இங்கே இறைவன் நம்முடனே பேசுகின்றார் கேட்போம்
நெஞ்சில் நிறைந்த பாரங்களை அவர் பதம் வைத்திடுவோம்
அவர் கருணை விருந்தில் குறைதீர்வோம்
வாழ்வோம் நன்றி சொல்வோம்