உடல் பொருள் ஆவி எல்லாம் உன் பாதம் நான் படைத்தேன் ***

உடல் பொருள் ஆவி எல்லாம் உன் பாதம் நான் படைத்தேன்

1. நான் பார்க்கும் உலகெல்லாம்
உன் சொல்லின் விரிவுரையே
அதில் வாழும் உயிர்களெல்லாம்
உன் அன்பின் தொடர்கதையே
அதைத் தந்தேன் பலிப்பொருளாய் ஏற்பாய்
எனைத் தந்தேன் ஒரு பொருளாய் சேர்ப்பாய்
திரு அப்பம் போல அதைப் பகிர்ந்து
அனைவர்க்கும் வாழ்வருள்வாய்

2. நிறைவாழ்வு உனதாகும்
நான் கண்டேன் பலிவாழ்வில்
பொருள் வடிவில் பலி தந்தேன்
உன் வாழ்வைத் தர வருவாய்
புது உரு என என்னை மாற்றிடுவாய்
புது உலகிது என நான் வாழ்வேன்
திருமகன் சாயலில் வளரவிடும்
நிறையருள் நான் பெறுவேன்