புதையல் ஒன்று தேடிக்கொண்டு வருகின்றேன் ***

புதையல் ஒன்று தேடிக்கொண்டு வருகின்றேன் - அது
புதைந்துள்ளது பீடம் என்று அறிந்து கொண்டேன்

1. சிலுவையிலே இயேசுபிரான் சேர்த்த செல்வம் - திருப்
பலியினிலே புதைந்திருக்கக் கண்டு கொண்டேன்
விலையில்லாத செல்வம் அது என்றுணர்ந்தேன் - எந்த
விலை கொடுத்தும் அதனைப் பெற உறுதி கொண்டேன்

2. மனிதனாகப் பிறந்து இந்த மண்ணில் காணும் - என்
மனக்கவலை மாற்றும் இந்த புதையல் தானோ
புனிதனாக நானும் என்னை வாழ வைக்க - இனி
போதுமான அருளைத் தரும் புதையல் அல்லவோ