வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம் ***

வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம்
இறைவனின் பலியினில் இதயத்தை இணைத்திடுவோம்
இதைவிட அதிசயம் ஏதுமில்லை - இந்த
திருப்பலிக்கிணையிங்கு எதுவுமில்லை
இணைவோம் பகிர்வோம் நிறைவடைவோம்

1. வார்த்தையின் வடிவினில் பேசிடும் கடவுள்
வாழ்ந்திட வழி சொல்லும் பலியிதுவே
உழைப்பின் கனிகளை காணிக்கையாக
உவப்புடன் ஏற்றிடும் பலியிதுவே
தன்னுடல் தந்து நம்மையே காக்கும்
தியாகத்தின் பகிர்வின் பலியிதுவே

2. உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமை அகற்றி
சமத்துவம் சமைத்திடும் பலியிதுவே
மனதின் சோதனை வேதனை அனைத்தும்
வென்றிட வலுதரும் பலியிதுவே
தோல்விகளாலே துவண்டிடும் வேளை
துணிச்சலை தருகின்ற பலியிதுவே