ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே ***

ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே
வாழ்வும் செயலும் சிந்தனையும்
வாஞ்சையோடு அளிக்கின்றேன்
ஏற்றருள்வீர் எம் பிதாவே

1. நீளக் கிண்ண இரசமதிலே நீர்த்துளி போலே கலந்து
நேச இயேசுவின் பாதத்திலே
நிரந்தரமாய் நான் நிலைத்திடவே
ஆசைக் கொண்டேன் அருள்புரிவீர்

2. இன்னும் என்றும் உம்மிடமே
இயேசுவே நான் வாழ்ந்திடுவேன்
இனிமேல் வாழ்வது நானல்ல
இயேசுவே என்னில் வாழ்ந்திடுவார்
என்ற வரத்தை எனக்களிப்பீர்