எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம் ***

எல்லாம் கொணர்ந்தோம் திருவடி வைத்தோம்
ஏற்றிடுவாய் இறைவா பலியாய் மாற்றிடுவாய் தலைவா

1. அன்பும் அருளும் பண்பும் பாசமும் எல்லாம் நீ தந்தது
வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும்
மகிழ்வுடன் நீ தந்தது

2. சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள்
எல்லாம் நீ தந்தது
உடல் பொருள் ஆவி உணர்வுகள் எல்லாம்
உவப்புடன் நீ தந்தது

3. உழைப்பின் பயனும் உழைத்திட சக்தியும்
எல்லாம் நீ தந்தது
படைப்புகள் எல்லாம் உன் அருள் விளக்கும்
எனக்காக நீ தந்தது